யாழ். பல்கலையின் முன் குவியும் மக்கள்; பதற்றமான சூழல்..!

0
84

யாழ் பல்கலை கழகத்திற்குள் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலை கழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் குவிய ஆரம்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சூழலில் பெருமளவான பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.

இன்று வெள்ளிக் கிழமை மாலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று, நினைவுத்தூபி இடிக்கப்பட்டு வருகிறது.
பல்கலை கழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது. பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here