வவுனியா நகரப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

வவுனியாவின் தற்போதய கோவிட் 19 பரவல் தொடர்பாக நகரமத்தியில் அமைந்துள்ள 7 பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு இயங்க அனுமதிக்க வேண்டாம் என இன்று நடைபெற்ற மாவட்ட கோவிட் 19 தொடர்பான சுகாதார மேம்பாட்டு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர். சுகாதார அதிகாரிகள் போலிஸ் இராணுவ அதிகாரிகள் கல்விப்பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் என்போர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வ/இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம், வ/இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, வ/சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயம், வ/காமினி மகா வித்தியாலயம், வ/முஸ்லிம் மகா வித்தியாலயம், வ/சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலை, ஆகிய பாடசாலைகளும் இப்பகுதிகளில் ஆரம்பிக்க இருந்த முன்பள்ளிகளும் ஒரு வாரத்திற்கு அல்லது மறு அறிவித்தல் வரும் வரை இயங்க முடியாது என தீர்மானித்து உள்ளனர்.