பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸ் நில நடுக்கவியல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


அதில், பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

இதன் ஆழம் 15 கிலோமீட்டர் ஆகும் நில நடுக்க அதிர்வுகள் கடாபவன், கோரோடல் ஆகிய நகரங்களில் உணரப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கமாக இது கருதப்படுகிறது.

மேலும் இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.