வாடிக்கையாளர்களின் பணத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டங்கள்..!

பல்வேறு நுட்பமான முறைகள் மூலம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் பணத்தை வசூலிக்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்க தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் (05) ஊடகங்கள் மத்தியில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் விசேடமாக தண்டப் பணம் அறவிடுவதாக கூறி சில நிதி நிறுவனங்கள் கணக்கு வைத்திருப்பவர்களின் அனுமதியின்றி பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் இந்த நடவடிக்கையை தம்மால் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில் நிச்சயமாக செலுத்தப்பட வேண்டிய தினத்தில் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதுவே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நடைமுறையே பின்பற்றப்படும். இந்தியாவிடம் பெற்றுக் கொண்ட கடன் உரிய நேரத்தில் செலுத்தி முடிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.