அலரி மாளிகைக்கு முன் பல்கலைக் கழக மாணவர்கள் சத்தியாக் கிரகத்தில்..!

0
142

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களால் அலரிமாளிகைக்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தற்போது சத்தியாக் கிரகப் போராட்டமாக அதனை மாற்றி மேற்கொண்டு வருகின்றார்கள்.


கடந்த வரவு செலவுத் திட்டத்தில், பல்கலைக் கழகத்தில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அதனை நம்பி விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.