மேல் மாகாணத்தின் 412 பாடசாலைகளை பெப்ரவரி 15 இன் பின்னர் மீண்டும் திறக்க ஏற்பாடு..!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக ஆரம்பிக்க முடியும் என பிரதேச தொடர்பு குழு அறிக்கை சமர்பித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை கோரியுள்ளோம். மேல் மாகாணத்தில் உள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை 15 ஆம் திகதிக்கு பின்னர் திறக்க முடியும்.


ஏனைய 80 பாடசாலைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் திறக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.