மட்டுப்படுத்தப்பட்ட SLAS பெறுபேறுகளில் தமிழ் மொழி மூலமான மாணவர்கள் எவருமில்லை..!

56 வெற்றிடகளுக்காக 2020ஆம் ஆண்டு தை மாதம் நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் தற்போது பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


நேர்முகத் தேர்வுக்கு தெரிவாகியுள்ள 69 பேர்களுடைய பெயர் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்பேசும் மாணவர்கள் எவரும் நேர்முக தேர்வுக்கான பட்டியலில் உள்ளடக்கப்டவில்லை.


கடந்த முறை 2017இல் நடைபெற்ற மட்டுப்படுத்தப்ட்ட பரீட்சையில் 59பேர் தெரிவாகியிருந்த நிலையில் 21பேர் தமிழ் பேசும் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி சித்தியடைந்ததுடன் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக யாழ்ப்பாணத்தினை சேர்ந்த பரணிதரன் மற்றும் சிவராஜா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றிருந்தனர்.


எனினும் இம் முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் படி தமிழ் மொழி பேசும் மாணவர்கள் எவரும் தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.