வவுனியாவில் 7 வயது பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

0
127

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றயதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.


இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.


இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ் வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.