வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு..!

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள வீட்டில் 16வயதுடைய சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (09.02.2021) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கா.போ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பியதுடன் அவரின் பாடசாலை சீருடை என்பவற்றினை தோய்த்து விட்டு வீட்டில் அவரும் அவரது தங்கையும் தனிமையில் இருந்துள்ளனர்.


குறித்த சமயத்தில் குறித்த மாணவி வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டினுள் நின்ற தங்கை வெளியே சென்ற சமயத்தில் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்து தங்கை உடனடியாக அயலவர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றினை தெரிவித்துள்ளார்.

எனினும் அயலவர்கள் வீட்டினுள் வந்த சமயத்தில் குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.


அதன் பின்னர் அயலவர்கள் மாணவியின் பெற்றோர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பிரேத பரிசோதனைகளுக்காக மாணவியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.