பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் இங்கையிலும்; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் அதிக பரிமாற்றத்தைக் கொண்ட பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர், மருத்துவர் சந்திமா ஜீவந்திரா அறிவித்திருந்தார்.


அது தொடர்பில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

சைப்ரஸிலிருந்து வருகை தந்தோருக்கே பிரிட்டனில் பரவும் கோரோனா வைரஸின் பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு தொற்றுள்ளமை ஒருவாரத்துக்கு முன்பாக கண்டறியப்பட்டது.


அவர்கள் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப் பட்டிருந்தனர். அதுதனாலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக ஆய்வில் வவுனியாவும் உள்ளடங்குகிறது.

உள்ளூர் மக்களிடம் ஏற்பட்ட தொற்றில் குறித்த வகை வைரஸ் இல்லை என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது, இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.