உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை..!

இலங்கையில் புதிய வீரியம் கொண்ட வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து மறுஅறிவித்தல் வரும் வரை பாடசாலை நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாண, வலய கல்வி அலுவலகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எதிர்வரும் தினங்களில் பாடசாலைகளில் ஏதேனும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டிருந்தால், அவ்வாறான நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி முதல் 25ம் திகதி வரை கற்றல் விடுமுறையை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.