காந்தப் புலம் மாறியதால் நியண்ட தாள்ஸ் இனம் அழிந்தது : அதே நிகழ்வு தற்போது நடக்க ஆரம்பித்துள்ளது..!

பூமியில் சுமார் 42,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த மனித இனமான, நியண்ட தாள்ஸ் என்னும் முழு இனமும். பூமியின் காந்தப் புலம் மாறியதால் அழிந்து போனார்கள் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.

பூமிக்கு வட துருவம் மற்றும் தென் துருவம் என்பது உள்ளது. அது நிலையாகவே உள்ளது. ஆனால் பூமியின் வடக்கு காந்தப் புலம் மிக வேகமாக தெற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒரு நாளைக்கு 31 மைல் என்ற விகிதத்தில் இது நகர்ந்து வருவதால் இன்னும் சில காலத்தில் வட புலம் தென் புலமாகவும். தென் புலம் வட புலமாகவும் மாற நேரிடும். இவ்வாறு திடீரென மாறினால் உலகில் பெரும் அழிவுகள் தோன்றும்.


உதாரணமாக சூரியனில் இருந்து வரும், துகள்கள் பூமியில் வேறு திசையில் தாக்கும். மற்றும் அண்ட வெளியில் இருந்து பூமியை தாக்கிக் கொண்டு இருக்கும் பல கதிர் இயக்கங்கள், நேரடியாக பூமியில் பட வாய்புகள் உள்ளதால், மனிதர்களுக்கு புற்று நோய் வரும் சாத்தியம் உள்ளது. இது போக கடும் வெப்பம். மற்றும் சூரிய கதிர் தாக்கங்கள் ஏற்பட்டு.

இறுதியில் எல்லா ஜீவராசிகளும் கான்சர் காரணமாக இறக்க நேரிடும். அல்லது சூரியனில் இருந்து வரும் ஆபத்தான் எரி துகள்கள் பூமியை தாக்கி எரிக்கும். இப்படி பல ஆபத்துகளை நாம் சந்திக்க உள்ளோம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.


இது இவ்வாறு இருக்க, பறவைகள் மற்றும் சில விலங்குகள் வடக்கு திசையை நன்றாக அறியும். ஏன் எனில் அவைகளால் வடக்கு காந்த புலத்தை உணர முடியும். ஆனால் வட புலம் மாறி தென் புலமாக மாறினால். அவை பெரும் தடுமாற்றத்திற்கு ஆளாகும்.

அது போக விண்ணில் உள்ள செயற்கை கொள்கள் கூட தடுமாற்றம் அடையும் நிலை தோன்றலாம். இவ்வாறு நாம் பெரும் ஆபத்து ஒன்றை சந்திக்க நேரிடும் என்று தற்போது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.


42,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த மரம் ஒன்றை எடுத்து விஞ்ஞானிகள் செய்த ஆராட்சியின் அடிப்படையில். காந்தப் புலம் மாறு மட்டுள்ள விடையத்தையும். அதனால் ஏற்பட்ட அழிவையும் அவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.