தேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..!

தேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு

01. 2023 ஆம் ஆண்டிற்கான கலைத்திட்ட தயாரிப்பில் மொடியுல் எழுதுவதற்காக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் தேசிய கல்வி நிறுவகத்தின் அனைத்து பாடத் துறைகளுக்கும் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் உதவி விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் 25% கொடுப்பனவாக வழங்கப்படும்.


2. இவர்களுக்கு ஆசிரியர்களுக்கான சம்பளமும் மேற்குறிப்பிடப்பட்ட கொடுப்பனவும் வழங்கப்படுவதோடு, ஏனைய சில குறிப்பிட்ட வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

3. தேசிய கல்வி நிறுவகத்தின் நிரந்தர விரிவுரையாளர்கள் உள்வாங்கப்படும் இடத்து இவர்களின் தற்காலிக இணைப்பானது விசேட கவனத்தில் கொள்ளப்படும்.


4. தேசிய கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகைமையாக குறிப்பிட்ட பாடத்தில் பட்டதாரியாகவும் பட்ட மேற்கல்வி டிப்ளோமாவும் குறைந்தது ஆறு வருட ஆசிரிய அனுபவமும் முக்கியமானதாகும்.

5. தகைமை மற்றும் விருப்பம் உடையோர் தங்களால் தயாரிக்கப்பட்ட சுயவிபரக்கோவை ஒன்றை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


For science field ( science, Technology subject mathematics, commerce, IT, Health Sciences)

Deputy Director General,
Faculty of Science and Technology,
National Institute of Education,
Maharagama.

Other subjects

Deputy Director General,
Faculty of Languages, Humanities and Social Sciences
National Institute of Education,
Maharagama.