நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பிரம்பால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..!

தாயொருவர் காய்ச்சல் காரணமாக சுகயீனமுற்றிருந்த தனது 9 வயதுடைய மகளை மாந்திரீக முறையில் குணப்படுத்த பெண் ஒருவரிடம் அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மீகஹாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துபொட பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுகயீனமுற்றிருந்த குறித்த சிறுமியை குணப்படுத்துவதாகக் கூறிய பெண் அவர் மீது ஒருவகை எண்ணெயை பூசி பிரம்பால் அடித்துள்ளார்.


இதன் போது சிறுமி மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். சம்பவத்தையடுத்து பியகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி உயிரிழந்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.