பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் கல்விப் புரட்சியை ஏற்படுத்தட்டும் – ரிஷாட்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சகலரதும் அடைவுகள் நல்ல முறையில் அமைந்து, அவர்களது எதிர்கால அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


நாளை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பரீட்சார்த்திகள் அனைவரும் தத்தமது எண்ணங்களில் ஈடேற வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் நடைறெ வேண்டிய இந்தப் பரீட்சை, மூன்று மாதங்களின் பின்னர் நடைபெறுகிறது. உலகையே உலுக்கி எடுக்கும் “கொரோனா” எமது மாணவர்களது கற்றலையும் பாதித்திருக்கிறது.


எனினும், இந்தத் துயரங்களால் பின்வாங்காது, தொடர்ந்து முயற்சித்து மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டனர். இதற்காக, இவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக, பெற்றோர்கள் இதில் எடுத்துக் கொண்ட பங்குகள்தான் பெரும் புகழுக்குரியது.
எனவே, மாணவர்களின் பெறுபேறுகள் சிறப்புற அமைந்து, பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் இருக்க வாழ்த்துகின்றேன்.


கல்வித் துறையின் முக்கிய திருப்புமுனையாக இந்தப் பரீட்சையே இருக்கப் போகிறது என்பதை மாணவர்கள் மறந்துவிடாது, இயன்றளவு நல்ல பெறுபேறுகளைப் பெறுவதற்கு முயற்சிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.