முல்லைத்தீவில் சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடிய நபர் கைது..!

நடைபெற்று வரும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சைக்கு தோற்றிய நபர் ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – சிலாவத்தை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றவிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.


கைதானவர், 27 வயதுடைய நெடுங்கேணி பரசன்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.