சிறுவர்களை தொடர்ச்சியாக கல்விக்கு உட்படுத்துவது ஆபத்தானது..!

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனியின் திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கராபிட்டிய போதனா வைத்திய சாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக அல்லது இடைவெளி விட்டு இதனைப் பயன் படுத்துவதனால், இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதனால், நீண்டகால தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மனநல வைத்தியர் தெரிவித்தார்.


இதேவேளை, இந்த நாட்களில் குழந்தைகள் வீட்டினுள்ளேயே சிக்கி இருப்பதனால் அவர்கள் கணனிகள் மற்றும் கையடக்க தொலை பேசிகளுடன் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்