பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்; கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப் படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


தற்போது, மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.