ஆகஸ்ட் முதல் வீட்டிலிருக்கும் மாணவர்கள் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுகம்..!

0
256

வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத் திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக நேற்று (9) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.