சிறுவர்கள் முகக் கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..!

முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார்.


மேலும், பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (09) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் சுட்டிக் காட்டினார்.