ஆசிரியர் ஒழுக்கக் கோவை..!

கற்பித்தல் என்பது ஒரு உன்னதமான தொழிலாகும். ஆதற்காக ஆசிரியர்கள் பொறுப்புடனும் வகை செல்லத்தக்க வகையிலும் செயற்படுவது அவசியமன ஒன்றாகும். ஒரு ஆசிரியர் தனது பணியில் தரத்தினைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர் ஒட்டு மொத்த சமூகத்தினருக்கும் கடமைப்பட்டுள்ளார்.

அத்தோடு தமது வகிபகத்துக்குரிய சட்ட திட்டங்கள், சுற்று நிருபங்கள் போன்றவற்றை கவனித்து தனது பணிக்கு முதன்மையளித்து அதனை சீராக செய்வதையும் அதற்கு தேவையானவற்றை கட்டியெழுப்புவதும் ஒரு ஆசிரியரின் பொறுப்பாகக் காணப்படுகின்றது. அவருடன் தொடர்புபட்ட நெருங்கிய தொடர்புகளே பொறுப்புக்களாகும்.

ஒரு ஆசிரியரானவர் தனது பொறுப்புக்களை அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் 3 காணப்படுகின்றன.

1. ஒழுக்கம் சார்ந்த பொறுப்பு
2. தொழில் சார்ந்த பொறுப்பு
3. ஒப்பந்தம்(நியமனம்) சார்ந்ந பொறுப்பு

இவற்றை கருத்திற் கொண்டே ஆசிரியர் தமது பணியை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியரின் ஒழுக்கக் கோவை

எந்தவொரு தொழிலைப் பொருத்த மட்டிலும் அதற்கென சிறப்பு பணிகள், நடத்தைகள், பொறுப்புக்கள் ஆகிய மூன்று அம்சங்களும் உள்ளடங்கும் வகையிலேயே தயரிக்கப்பட்டுள்ள நியமனங்களை இத்தொழிலுக்குரிய ஒழுக்கக் கோவை எனலாம். நாம் எதனை சரியாக செய்ய வேண்டும் என விளக்கப்பட்டிருக்கும்.

ஒருவர் ஆசிரியர் என்ற வகையில்  வகுப்பறையின் முன்னே நின்றதற்காக அவர் ஆசிரியராகி விட மாட்டார். ஆவர் தனக்கென தொழில் சார்ந்த பணிகளையும் இதமாகவும், இலகுவாகவும்  செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க கோவை ஒன்றினூடாக நிறைவேற்றும் போது அவர் ஒரு சிறந்த ஆசிரியர் என கனிக்கப்படுகின்றார்.

அதனால் தான் ஒரு ஆசிரியருக்கு இவ் ஒழுக்கக்கோவை மிக அவசியமான ஒன்றாகும் உதாரணமாக:

 • • “ஆசிரியர்” என்ற தொழில் வாண்மையின் கௌரவத்தைப் பாதுகாக்க.
 • • தனக்குறிய கடமையை உச்ச அளவில் அடைய கடைமகளுடன் மேற்கொள்ள
 • • சிறந்த மானுடத் தொடர்புகளை ஏற்படுத்த 
 • • இறுதிக் குறிக்கோளை தடைகளின்றி அடைய. 
 • • பாடசாலையின் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் பேண.
 • • சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ
 • • ஆசிரியர் தொழில் தொடர்பாக அர்பணிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு இவ் ஒழுக்கக் கோவை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

இவ்வாறு ஆசிரியரக்குறிய ஒழுக்கக்கோவை பல்வேறுவகையில் வலியுருத்தப்பட்டாலும் இக்கோவையுடன் தொடர்புபடும் ஆசிரியர் பல்வேறு துறைகளை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் அத்துறைகளாக:

 1. 1. ஆசிரியர் ஒழுக்கக் கோவை
 2. 2. ஆசிரியர் மாணவர் தொடர்பு
 3. 3. ஆசிரியர் ஆசிரியர் தொடர்பு
 4. 4. ஆசிரியர் பெற்றார் தொடர்பு
 5. 5. ஆசிரியர் அலுவலக இடைத்தொடர்பு

எனப் பலவாறு காணப்படுகின்றது.1. ஆசிரியர் ஒழுக்கக் கோவை

 1. 1. ஆசிரியர் தம்முடைய உடை விடயத்தில் எளிமையாகவும் ஒழுங்காகவும் அமைத்தல் வேண்டும்.
 2. 2. ஆசிரியரின் சொல்லும், செயலும் முன்மாதிரியாகவும் நேர்மையாகவும் இருத்தல் வேண்டும்.
 3. 3. மாணவர்களின் சமய, சமூக, சாதி விடயத்தில் நியாயமாகவும், சமமாகவும் இருத்தல் வேண்டும்.
 4. 4. ஆசிரியரின் நடத்தையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வயையிலும் முன்மாதிரியாகவும் இருத்தல் வேண்டும்
 5. 5. தொழிலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய துர்நடத்தைகளை விட்டும் விலகியிக்க வேண்டும்.

2. ஆசிரியர் மாணவர் தொடர்பு

 1. 1. ஆசிரியரின் மனப்பாங்குகள், திறமைகள், கொள்கைகள் என்பன மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அமைதல் வேண்டும்.
 2. 2. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோர், மூத்தோர் போன்று செயற்பட வேண்டும்.
 3. 3. மாணவர்களின் தேவைகள், பிழைகள், பலம், பலவீனங்களை என்பவற்றை விளங்கி செயற்பட வேண்டும்.
 4. 4. மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்.
 5. 5. மாணவர்களின் பெற்றார் வேண்டிக் கொள்ளும் வகையில் பிரத்தியோக வகுப்புக்கள் கொடுக்க வேண்டும்.
 6. 6. முhணவர்களின் உடல், உள ரீதியான குறைபாடுகளை கருத்தில் கொண்டு கல்விச் செயற்பாட்டுக்கு உதவுதல் வேண்டும்.
 7. 7. மீத்திறன் உள்ள மாணவர்களையும் கருத்தில் கொண்டு வகுப்பறைச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க வேண்டும்.
 8. 8. மாணவர்கள் உச்சாகத்துடன் பங்கெடுக்குமளவுக்கு உள்ள கற்றல்-கற்பித்தல் சாதனத்தையும் பாடத்திட்டத்தையும் ஒழுங்கமைக்க வேண்டும்.
 9. 9. மாணவர்களின் கற்றலின் வெளிப்பாடுகளை சிறப்பாக முறையில் மதிப்பீடு செய்து பின்னூட்டல் வழங்க வேண்டும்.

3. ஆசிரியர் ஆசிரியர் தொடர்பு

 1. 1. ஏனைய ஆசிரியர்களின் பால் அன்பாகவும் உண்மையாகவும் உதவிசெய்யக்கூடியவாறும் கவரக்கூடியவாறும் இருப்பார்.
 2. 2. ஏனைய ஆசிரியர்களுடன் அறிவு,திறன்,மனப்பாங்கு சார்பாக பகிர்ந்து கொள்வார்
 3. 3. ஏனைய ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி அவரது கடமைகளை சிறப்பாக செய்யவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உதவுவார்.
 4. 4. ஏனைய ஆசிரியர்களை அவமானப்படுத்தத்தக்க ஊக்கமின்மையை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்ப்பார்.

4. ஆசிரியர் பெற்றார் தொடர்பு

 1. 1. மாணவர்கள் உள,உடல் போன்ற அபிவிருத்தி நோக்கத்தில் கலந்துரையாட வருகின்ற பெற்றோர்களுடன் கவனமாகக் கலந்துரையாடுதல்.
 2. 2. மாணவர்களின் பலவீனங்கள், பிழைகள், துர்நடத்தைகள் சம்பந்தமாக அன்பாகவும் அமைதியாகவும் பெற்றோருக்குப் புரியும் விதமாக எடுத்துரைத்தல்.
 3. 3. மாணவர்களை தரக்குறைவாக பெற்றோரிடம் கூறுவதை; தவிர்த்தல்.
 4. 4. உடல், உள ரீதியான அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு பரிந்துரை செய்து வழிகாட்டல்
 5. 5. பெற்றார்-ஆசிரியர் கருத்தரங்குகளில் பங்குபற்றி உரையாடி நாட்டின் கல்வி அமைப்பைச் சீர்செய்வதற்கும் ஒழுங்கமைப்பதற்குமாக கருத்துக்களைப் பெறல்5. ஆசிரியர் அலுவலக இடைத் தொடர்பு

 1. 1. வகுப்பறையிலும், பாடசாலையிலும் ஒழுக்கத்தைக் கடைபிடித்து உண்மையாக இயங்குதல். 
 2. 2. சம்பளத்திற்கா இல்லாமல் மாணவர்களின் நலனுக்காகச் செயற்படும் நிலையை ஏற்படுத்தல்.
 3. 3. அதிபருடனும் ஏனைய நிருவாக அதிகாரிகளுடனும் தனது வாண்மை சார் அறிவையும், திறனையும் பயன்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளுதல்.
 4. 4. அதிகாரிகளுக்கு ஏனைய ஆசிரியர்கள் சார்பான நல்லெண்ணத்தைக் குறைக்கத்தக்க அறிக்கைகள், ஆவணங்களை வழங்குவதைத் தவிர்த்தல். 
 5. 5. ஆசிரியர்களின் அபகீர்த்திக்கு துண்டத்தக்க வண்ணம் விருந்துபசாரம், அன்பளிப்பு என்பவற்றை ஒரு அதிகாரி வழங்கும் போது அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல்.
 6. 6. புதிதாக ஆசிரியர் தொழிலுக்கு வருகின்ற இளம் ஆசிரியர்கள் பற்றிய குறைபாடுகளையும், பிழைகளையும் அதிகதரிகளிடத்தில் கூறுவதைத் தவிர்த்தல்.
 7. 7. அதிகாரிகளுக்கு இலஞ்சம் அல்லது பரிசு முதலியவற்றை வழங்குதலைத் தவிர்த்தலும் ஏனையோரை அதன் பால் ஊக்கப்படுத்தாமையும்