ஆசிரியர் சேவா சங்க செயலாளர் மஹிந்த ஜயசிங்கவுக்கு பிணை..!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சிலரை இன்று (07) நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.


அதன்படி, கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஆசிரியர் சேவா சங்கத்தின் செயலாளருமாகிய மஹிந்த ஜயசிங்க உள்ளிட்டோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டனர்.