டெல்டாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்ததும் லாம்ப்டா திரிபு வைரஸ்..!

டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரு நாட்டில் உருவான லாம்ப்டா கொரோனா வைரஸ் 30 நாடுகளில் பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. பெரு நாட்டில் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் இப்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


ஐரோப்பிய நாடுகள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என இங்கிலாந்து சுகாதார மையம் தெரிவித்துள்ளது.