ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது; யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு..!

யாழ் பேருந்து நிலையம் முன்பாக நாளை (வெள்ளிக் கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவ மயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.


அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்து கொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.