உயர்தர பரீட்சை ,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளில் மாற்றம்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதே போன்று 2021 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.