இன்று அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் – மஹிந்த தெரிவிப்பு

Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இன்று தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் 30 தொழிற் சங்கங்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.