கொரோனா காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்..!

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள் மீண்டும் மீள ஆரம்பிக்க மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மாத்திரமே சலை அமர்வு இடம்பெறும்.


காத்தான்குடி பிரதேசத்திற்கான மத்தியஸ்த சபை நடவடிக்கைகள் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் தவிசாளர் எம்.ஐ.எம் உசனார் தலைமையில் நேற்று (01) நடைபெற்றுள்ளது.