ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து – மட்டுவில் ஆசிரியர்கள் போர்க்கொடி

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (02) முன்னெடுத்திருந்தது.


மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.


இதன் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, இலவச கல்வியை இராணுவமயமாக்காதே ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.