வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 3 – 11 வரை நடைபெறவுள்ள நிலையறி பரீட்சை..! (விபரம் இணைப்பு)

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 3 – 11 வரையான தரங்களுக்கு நிகழ்நிலையிலும் (online), வன் பிரதியாகவும் (Paper) நிலையறி பரீட்சை ஒன்று இடம்பெற உள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்கள் வரும் வாரம் கிடைக்கும்.


எனினும் ஒவ்வொரு தரங்களுக்குமான நிலையறி பரீட்சை இடம்பெறவுள்ள அலகுகளின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் 10, 11 மாணவர்களுக்கு இரண்டாம் தவணை வரைக்குமான அலகுகள் பரீட்சைக்காக கொள்ளப்பட்டுள்ளன.


இப் பரீட்சை பற்றிய விபரங்களை மாணவர் மத்தியில் அழுத்தமாக கொண்டு சென்று இத்தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


பெற்றோர், மாணவர்களின் கலைந்துபோன கல்விசார் கவனத்தை மீளக்குவிப்பதற்கு இப் பரீட்சையை பயன்படுத்தும் பொறுப்பு எம் அனைவருடையதுமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.