இன்றைய அமைச்சரவையிலும் ஆசிரியர் பிரச்சனைக்கு தீர்வு இல்லை???

இன்றைய அமைச்சரவையில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர் காமினி லோகுகே ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயற்படுத்த ரூ. 56 பில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.


இருப்பினும், இந்த நேரத்தில் அரசாங்கத்தால் அத்தகைய பணத்தை ஒதுக்க முடியவில்லை. எனினும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், என்றார்.