சிவில் உடையில் வந்த பொலிசார் விரிவுரையாளரை இழுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு..!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலத்திற்கு எதிராக போராட்டத்தின் பின்னர் ,திரும்ப தயாரான சிறிஜெயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை சிவில் உடையில் வந்த பொலிசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், தாம் தேடி வந்தது அவரல்ல, ஆள் மாறி செயற்பட்டு விட்டோம் என பொலிசார் அங்கிருந்து சென்றுள்ளனர். விரிவுரையாளர் அமிந்த லக்மல் என்பவரையே கைது செய்ய முயற்சிக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி விட்டு திரும்ப தயாராக பேருந்தில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், வைத்தியர்கள் தயாரான போது சிவில் உடையில் ஏறிய மூவர், அவரை இழுத்துச் செல்ல முயன்றனர்.

எனினும், பேருந்திற்குள் இருந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தம்மை மீரிஹான பொலிசார் என அடையாளம் காண்பித்ததாக சொல்லப்பட்டுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முகநூலில் பதிவிட்டுள்ள விரிவுரையாளர் அமிந்த லக்மல், அரசாங்கம் அடக்குமுறையைத் தொடங்குகிறது. இன்று எனக்கு வந்தபோது எனக்கு சில உதவியாளர்கள் மற்றும் துணை இருந்தனர். அது நாளை உங்களுக்கு வரலாம்.

ஆனால் அது வரும்போது உங்களுக்காக யாரும் இருக்க முடியாது. நீங்கள் என்ன காரணத்திற்காக கைது செய்யப்படுகிறீர்கள் என்று தெரியாமல் நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம். இறக்க முடியும். இது ஒரு ஜனநாயக அரசின் பண்பு அல்ல என அவர் பதிவிட்டுள்ளார்.