சாதாரண சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடைமுறை இடைநிறுத்தம்..!

சாதாரண சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அவசர தேவை காணப்படும் பயனாளர்களுக்கு ஒரு நாள் விசேட சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.


பத்தரமுல்லை தலைமையகத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.