ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலி; அமைச்சரவை குழு நியமனம்..!

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன் வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம் பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போது குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


அதன்படி, குறித்த குழுவில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியவர்கள் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.