கொரோனாவின் எதிரொலி; நாட்டில் சிறுவர் திருமணங்கள் அதிகரிப்பு..!

பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.


குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு உள ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.

பெற்றோர்கள் குழந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது.


ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.