அதிபர் – ஆசிரியர்களின் உணர்வுடன் விளையாடும் தொண்டமனாறு வெளிக்கள நிலையம்..!

நாட்டில் தொடர்ச்சியாக அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதனை மலினப்படுத்தி குழப்பங்களை உருவாக்கும் நோக்கில் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைக்கான திகதியை அறிவித்துள்ளது.


அதாவது 11.8.2021 தொடக்கம் பரீட்சையை நடாத்துகின்றது. குறித்த பரீட்சைக்கான கடமை, மற்றும் திருத்தம் என்பவற்றை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய நிலையில் குறித்த சம்பவம் அதிபர் – ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனினும் குறித்த அறிவிப்பை உதாசீனம் செய்யும் முடிவை சங்கங்கள் மற்றும் பல பிரபல பாடசாலைகள் எடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளதுடன் எதிர்காலத்தில் குறித்த பரீட்சைக்கு ஒட்டுமொத்த வடக்கு மாகாண அதிபர்-ஆசிரியர்கள் விண்ணப்பிக்காது புறக்கணிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.


இத்தகய காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளால் வடக்கு மாகாண கல்வி மேலும் பின்னடையே சந்திக்கும் என்பதுடன் குறித்த நிறுவனத்தின் இத்தகய மலினப்படுத்தும் செயற்பாடுகளின் பின்னணியில் அரசிற்கு சாமரம் வீசும் தமிழ் அதிகாரிகளே உள்ளனர் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.