சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்; பொருத்தமானவர்களை நியமிக்கத் தீர்மானம்..!

ஸ்ரீலங்காவில் மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்க அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அப் பதவியில் இருக்கும் பவித்ரா வன்னியாராச்சி தனது சுகாதார அமைச்சர் பதவியை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சுகாதார அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கும், வெளிவிவகார அமைச்சு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.


இதற்கு மேலதிகமாக மின்சக்தி, சுற்றுலா, கல்வி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்குவது குறித்தும் அரசு மேல்மட்டத்தில் ஆராய்ந்து வருகிறது.