யாழ் பல்கலைக் கழக பணியாளர் ஒருவர் கொரானாவால் மரணம்..!

யாழ் பல்கலைக் கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக் கழக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபரின் குடும்பத்தில் நெருக்கமான உறவினர்கள் சிலர் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சிகிச்சை பெற்று வந்த குறித்த பணியாளர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.