15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை; விளம்பர இணைய தளங்களுக்கு தடை..!

கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன் படுத்தப்பட்ட அனைத்து இணையத் தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.


கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தளம் தடை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.


இந்த இணையதளங்களை தடை செய்ய தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் கொடுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வலைத்தளங்கள் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.