லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை – அமைச்சர் வெளியிட்ட தகவல்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.


இதேவேளை, லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 145 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாகும்.