ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்..!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு நேற்று கொழும்பில் கூடியது.


‘சுபீட்சத்தின் தொலைநோக்குக்’ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில் துறையாக கருதும் வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.


எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் தொழிற் சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.