அதிபர், ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தனித்தனியாக அழைப்பு; ஜோசப் ஸ்டாலின் நிராகரிப்பு..!

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபகுழு அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அனைத்து தொழிற் சங்கத்தினரையும் ஒன்றாக சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளார்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கத்தினர் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அதேவேளை இவ்வாறு பிரித்தாளும் சூழ்ச்சியூடாக பொதுப் பிச்சினையை தனிப்பட்ட ஒருசில சங்கத்தின் பிரச்சினை போல் காட்டுவதற்கான முயற்சியில் அரசு கடும் முயற்சியெடுத்து வருகின்றது.