அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் குறைக்கப்படாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,


விரும்பியோ விரும்பாமலோ நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய நேரிடுகின்றது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அரைவாசியை குறைக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.


எவ்வாறெனினும் நாடு அடைந்துள்ள பொருளாதார பின்னடைவிலிருந்து மீள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என நான் மக்களிடம் மன்றாடிக் கேட்கின்றேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.