கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெறும் கைதடி முத்துக் குமார சுவாமி மகா வித்தியாலய அதிபர்..!

யாழ் கைதடி முத்துக்குமார சுவாமி மகா வித்தியாலய அதிபராக பணியாற்றிய தாமோதரம்பிள்ளை கணேசபாலேந்திரன் (மந்துவில்) (SLPS I) அவர்கள், அரச கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.இவர் தனது சேவைக் காலத்தில்..

* கிளி/ மத்திய கல்லூரி 1989 – 1993

* கிளி/பளை மத்திய கல்லூரி 1993 – 1994

* கிளி/தருமக்கேணி பாடசாலை 1994 -1996

* கிளி/ முழங்காவில் ம.வி 1996 – 1997

* மன்/கூராய் பாடசாலை 1997 – 1999

* மன்/இலுப்பைக்கடவை அ.த.க 1999 – 2005

* கைதடி குருசாமி வித்தியாலயம் 2005 – 2013

* மட்டுவில் கமலாசினி வித் 2013 – 2015

* மட்டுவில் ஸ்கந்தவரோயா 2015 – 2017

* மட்டுவில் தெற்கு அ.மி.த.வி 2017 – 2018

* கைதடி முத்துக்குமாரசாமி 2018 – 2021 மந்துவில் வடக்கு,


இவர் கொடிகாமத்தில் 1961.08.22 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை மந்துவில் சிறீபாரதி வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

போர்க் காலத்தில் கிளிநொச்சி மற்றும் மன்னார்ப் பகுதிகளில் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றிய பெருமைக்குரியவர்.

இன்றும் அவ்விடங்களில் இவரது நினைவுகளைத் தாங்கி நடமாடுவோர் ஏராளமாக உள்ளனர். ஊரிலும், கல்விச் சேவை மட்டுமன்றி கோவில்கள் உட்பட பல்வேறு சமூக நிறுவனங்களில் அங்கத்துவமுடையவர்.


இவரது பணி ஓய்வு என்பது அவர்சார் கல்விப் புலத்தவர்களுக்கு இழப்புத்தான். எனினும் அவரால் வளர்க்கப்பட்ட அனேகமான இளையவர்கள் சமகாலத்தில் வளர்ந்து வருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சியே.

“இவரின் ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய நாமும் வாழ்த்துவோம்”