எனது சம்பளத்தை வழங்க முடியாது; கடன் நெருக்கடியில் உள்ளேன் – அமைச்சர் புலம்பல்

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக தமது ஒருமாதச் சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய முன் வந்துள்ளனர்.


எனினும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் தனது சம்பளத்தை வழங்க முடியாதென இன்று கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்திலுள்ள அரச வங்கியொன்றில் பெற்றுக் கொண்ட கடனுக்காக தனது சம்பளத் தொகை முழுமையாக அறவிடப் படுவதாகவும், கொரோனா பணிக்காக தனது சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாத பொருளாதார இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்