மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – வெளியாகிய ஆய்வு முடிவு

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப் படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளதும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதும் உறுதியாகியுள்ளது.


தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் உடலில் பிறபொருள் எதிரிகள் உருவாகின்றன. இதன் காரணமாக கொவிசீல்ட் தடுப்பூசிகளை மக்களிற்கு வழங்குவது பொருத்தமானது.


சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக், பைஸர் மற்றும் மொடேர்னா குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்