மேலும் 76,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் வருகை; வடக்கிற்கும் வழங்கப்படுமா?

76,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க தெரிவித்தார்.

நாளைய தினமும் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டு வரப் படவுள்ளதாகத் தெரிவித்த கூட்டுத் தாபனத்தின் பொது முகாமையாளர் எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக மேலும் கூறினார்.


இதேவேளை இவ்வாறு பைசர், ஸ்புட்னிக் போன்றன நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதும் மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு இத்தகய ஊசிகள் வழங்கப்படாது சினோபாம் ஊசிகளே வழங்கப்படுகின்றன.


இந்த விடயத்தில் வடக்கு மாகாணத்தை புறக்கணிப்பதன் நோக்கம் என்ன? எதிர்வரும் நாட்களிலாவது பைசர், ஸ்புட்னிக் போன்ற ஊசிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் வடக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.