வவுனியாவை சுற்றி வளைக்கும் கொரோனா; இன்றும் ஒருவர் விழுந்து மரணம்..!

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற நபர் வைத்திய சாலையில் தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு இருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்று (23.08) மாலை இடம் பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார்.

அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் வைத்திய சாலையை சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்திய சாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


இதனையடுத்து குறித்த நபர் வவுனியா வைத்திய சாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினமும் குருமன்காட்டுப் பகுதியில் பெண்ணொருவர் இவ்வாறு கீழே வீழ்ந்து மரணமானார். இதுமட்டுமன்றி உக்கிளான்குளம் பகுதியில் மரணமான ஒருவருக்கும், மாகாறம்பைக் குளம் பகுதியில் மரணமடைந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


எனவே தற்போதய சூழ்நிலை அறிந்து சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு உங்கள் உயிர்களையும் , உங்களின் அன்புக்கு உரியவர்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.