அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு; அரசின் முக்கிய அறிவிப்பு..!

அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இதேவேளை, தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று (23) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கடுமையான தொழிற் சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.