கொரோனா தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.
65 வயதுடைய மங்கள சமரவீர அரசியலில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவராவார். இவர் 2005-2007 வரை இலங்கை வெளி விவகார அமைச்சராகவும் கடந்த நல்லாட்சியில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவராவார்.
இவர் கொரோனா தடுப்பூசி இரண்டையும் போட்டுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.