கொழும்பில் 12 வயது பாடசாலை மாணவி கொரோனாவுக்கு பலி..!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

நாவல பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் தரம் -07 இல் கல்வி கற்கும் குறித்த சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.


இதையடுத்து அவறுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த குறித்த 12 வயது சிறுமியின் தாய், வைரஸ் மேலும் பரவுவதை அனுமதிக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


“கொரோனா என் குழந்தையை அழைத்துச் சென்றது. என் குழந்தைக்கு நடந்ததை போன்று வேறுக்கும் நடந்து விடக் கூடாது” கொரோனா தொற்று வெற்றி பெற அனுமதிக்காதீர்கள், ”எனக் குறிப்பிட்டுள்ளார்.